தேவையானவை :
புடலங்காய் – 1
துவரம் பருப்பு – 1 கிண்ணம்
பெருங்காயம் – 1 தே. கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தே. கரண்டி
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – 2
உப்பு – தேவையான அளவு
அரைக்க :
தேங்காய் – 1 மே. கரண்டி
மிளகாய் வற்றல் – 1
பூண்டு – 1
மஞ்சள் பொடி – 1 தே. கரண்டி
செய்முறை :
துவரம் பருப்பை வேக விடவும். பாதி வெந்ததும் புடலங்காய் (பொடியாக நறுக்கியது), காயம், உப்பு சேர்த்துவேகவிடவும்.
காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சற்று கொதிக்க விடவும்.
இனி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, மிளகாய் வற்றல் (1), போன்றவற்றை தேங்காய் எண்ணையில் தாளித்து விடவும்.
குறிப்பு :
புடலங்காய்க்கு பதிலாக வாழைக்காய், முள்ளங்கி போட்டும் கறி வைக்கலாம்.