கோவக்காய் பொரியல்


கோவக்காய் 

(Ivy Gourd)

கோவக்காய் ஆசியா, ஆப்பிரிகா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைகிறது. வெள்ளரியைப்போல் தோற்றம் உடையது. ஆனால் அதைவிட  அளவில் சிறியது.

KovaikaaiCurry (1)

நன்மைகள் :

இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது. உடல் அயர்ச்சியைத் தடுக்கிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது. சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கிறது. 

 

கோவக்காய் பொரியல் 

KovaikaaiCurry (7)

தேவைப்படும் நேரம் : 30 நிமிடம் 

செய்முறை :

  • முதலில் சின்ன வெங்காயத்தை பத்து எடுத்து,  சிறிதாக அரிந்துக்கொள்ளவும்.
  •  தக்காளியையும் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
  • கோவக்காயை நன்றாக கழுவி, வட்டம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் ஒரு மேஜை கரண்டி அளவு துருவிக் கொள்ளவும். 

KovaikaaiCurry (27)

  • தாளிக்கும் கடாயையை அடுப்பில் ஏற்றவும்.
  • எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.  

KovaikaaiCurry (19)

KovaikaaiCurry (18)

 

 

  • கோவக்காயை சேர்த்து வதக்கவும். 

KovaikaaiCurry (17)

 

  • அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

KovaikaaiCurry (15)

 

  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.
  • மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி 2 தேக்காரண்டி சேர்க்கவும்.
  • மல்லி தூள் 2 தேக்கரண்டி சேர்க்கவும். உப்பும் சேர்க்கவும்.

KovaikaaiCurry (14)

 

KovaikaaiCurry (13)

 

  • நன்றாக வதக்கவும். 

KovaikaaiCurry (10)

 

 

  • சிறிது தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.

KovaikaaiCurry (9)

 

 

  • தேங்காய் துருவல், கருவேப்பிலை கடைசியில் சேர்த்து இறக்கவும்.

SAM_2331

 

  • சுவையான கோவக்காய் பொரியல்  ரெடி. எந்த சாப்பாட்டுடனும் எடுத்துக்கொள்ளலாம்.

SAM_2333

 

KovaikaaiCurry (6)

 

8TE6EMkjc

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மரவள்ளி கிழங்கு கறி


மரவள்ளிகிழங்கு

மரவள்ளிகிழங்கு என்பது நமது தென் இந்தியாவின், முக்கியமாக கேரளாவின் பிரதான உணவு. அவர்கள் அதை மீன் கறியுடன் கூட்டாய் வைத்து உண்ணுவார்கள். 

கிழங்கில் மாவுசத்து மட்டுமே உள்ளது. அதனால் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுப்பதில்லை. 

கிழங்கு கறி 

kilangucurry (1)

தேவையானவை :

மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ 

உப்பு தேவைக்கு

தே. எண்ணெய் – 2 மே. கரண்டி 

tumblr_n7fghqmkn81tedlifo6_r1_500

அரைக்க : 

தேங்காய் – 3 மே. கரண்டி

மிளகாய் வற்றல் – 1

மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி

வெள்ளை பூண்டு – 2 

கருவேப்பிலை  சிறிது 

8TE6EMkjc

தாளிக்க : 

தாளித்தல் கிடையாது. முடிக்கும் போது தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை பிய்த்து போட்டு இறக்கவும். 

செய்முறை :

Organic_Tapioca_Starch1

Tapioca2

  1. அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைத்துக் கொள்ளவும். ரொம்ப கரகரப்பாகவும் இல்லாமல், மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.
  2. கிழங்கை பொடியாக வெட்டி, நன்கு வேக வைக்கவும்.
  3. முக்கால் பாகம் வெந்ததும், உப்பு சேர்க்கவும்.
  4. அரைத்ததை சேர்த்து, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.
  5. தேங்காய் எண்ணெய்யும் கருவேப்பிலையும் சேர்த்து இறக்கிவிடவும். 
  6. சுவையான கிழங்கு கறி தயார். 

kilangucurry (3)

இஞ்சி சாதம்


இஞ்சி சாதம் 

SAM_6989

 

வீட்டில் இஞ்சி நிறைய இருந்தால், இஞ்சி சாதம் செய்யலாம். நானும் அப்படிதான் ஆரம்பித்தேன்.

இஞ்சியை தோலுரித்து, சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் சதைத்துக் கொள்ளவும்.

SAM_6985

கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, இலவங்கப் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் 

SAM_6978

 

இரண்டு பச்சை மிளகாயை நீளமாய் கீறிக் கொள்ளவும்..

SAM_6979

மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா 

SAM_6981

பாசுமதி அரிசி அல்லது கிச்சடி சம்பா அரிசியை நனைத்து வைத்துக் கொள்ளவும்.

SAM_6984

மைக்ரோவேவ் அவனில் (Oven) ஒரு கண்ணாடி பவுலில் எண்ணெய் ஊற்றி, ஒரு நிமிடம் சூடு பண்ணி, அதனுடன் பட்டை, லவங்கம், அன்னாசி பூ, இலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி  எல்லாம் சேர்த்து 2 mins வைத்து எடுக்கவும். 

SAM_6986

பிறகு அதனுடன் அரிசி, மிளகாய் பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஒரு அளவு அரிசிக்கு இரண்டு அளவு தண்ணீர் சேர்த்து oven யில் 20 mins வைக்கவும்.

இடையில் ஓரிரு முறை கிளறிக் கொடுக்கவும்.

இஞ்சி சாதம் ரெடி

SAM_6990

giphy1

சுண்டைக்காய் குழம்பு


சுண்டைக்காய் குழம்பு….

தேவையானவை 

  • சுண்டைக்காய் வத்தல் –  1 மே கரண்டி
  • மிளகாய் பொடி – 1 தே கரண்டி
  • மல்லி பொடி – 2 தே கரண்டி
  • மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
  • உப்பு
  • புளி கரைசல் – 2 மே கரண்டி

தாளிக்க

  • நல்லெண்ணெய் – 2 தே கரண்டி
  • கடுகு – 1/4 தே கரண்டி
  • வெந்தயம் – 1/4 தே கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது 
  • சின்ன வெங்காயம் – 1 மே கரண்டி
 

செய்முறை 

  • சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்து எடுத்துகொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • மிளகாய் தூள், மல்லி பொடி, மஞ்சள் பொடி, புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • நன்கு கெட்டியானவுடன் வறுத்து  வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.
  • இப்போது வத்தல் குழம்பு ரெடி……

முட்டை கறி


முட்டை கறி

தேவையானவை :

முட்டை – 4

உப்பு – சிறிதளவு

தாளிக்க :

கடுகு – 1/2 தே. கரண்டி

உளுந்தம் பருப்பு – ½ தே. கரண்டி

சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1 மே. கரண்டி 

கருவேப்பிலை – சிறிது

தே. எண்ணெய் –2 தே. கரண்டி 
அரைக்க :

தேங்காய் – 3 மே . கரண்டி 

மிளகாய் வற்றல் – 2

சின்ன வெங்காயம் – 1 மே. கரண்டி

மஞ்சள் பொடி – ½ தே. கரண்டி

சீரகம் – ½ தே. கரண்டி

கருவேப்பிலை – சிறிது

செய்முறை :

  • அரைக்க கொடுத்துள்ளதை கரகரப்பாக அரைக்கவும். 
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை போட்டு தாளித்து அதனுடன் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். கறி ரொம்ப தண்ணீராகவோ, ரொம்ப கெட்டியாகவோ இருக்கக்கூடாது.
  • அதனுள் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றவும்.
  • தீயை குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். முட்டை வேந்துவிட்டால் இறக்கி விடலாம்.
முட்டை கறி