எண்ணெய் கத்திரிகாய் குழம்பு


எண்ணெய் கத்திரிகாய் குழம்பு

 

 

 

வறுக்க :

மல்லி விதை – 1 மேசைக்கரண்டி
மிளகாய் – 5
நல்ல மிளகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (பெரியது) அல்லது 5 சின்ன வெங்காயம்
கருவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
தேங்காய் – 6 சில்லு அல்லது 2 மேசைக்கரண்டி

 

 

 

 

இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

 

 

 

குழம்புக்கு :

எலுமிச்சை அளவு புளி தண்ணீரில் ஊறப்போட்டு, புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.  

 

கத்திரிகாய்களை (3) கழுவி நான்காக குறுக்கே முக்கால்வாசி அளவுக்கு வெட்டவும்.

 

கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் (2 மேசை கரண்டி) ஊற்றி காயவைக்கவும். எண்ணெய் சூடானதும், கத்திரிக்காய்களை போட்டு வதக்கவும்.

 

 

நன்றாக வதங்கியதும் வெந்தயம் (1 தேக்கரண்டி), கடுகு (1 தேக்கரண்டி), கருவேப்பிலை கொஞ்சம் போட்டு பொரிக்கவும்.

 

 

 

அதனுடன் புளிக்கரைசலை ஊற்றிக் கொஞ்சம் கொதிக்க வைக்கவும். அரைத்த மசாலாவைப் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

 

 

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி..

 

 

இதனுடன் சாப்பிட வாழைக்காய் துவரன் அல்லது பருப்பு, பாசிப்பயறு துவரன் போன்றவை சரியாக இருக்கும்.  

பாசிப்பயறு துவரன்


பாசிப்பயறு துவரன்

பாசிப்பயறு ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது இது.

ஒரு கப் அளவு பாசிப்பயற்றை இரவில் ஊற வைத்துவிடவும். காலையில் நீரை வடித்துவிட்டு, உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைக்கும்போது, மேலே எழும்பிவரும் நுரையை நீக்கிவிடவும்.

அரைக்க :

தேங்காய் (1மேசைக்கரண்டி)

மிளகாய் வற்றல் (1)

வெள்ளைப்பூண்டு (4 பல் )

மஞ்சள் தூள் (அரை தேக்கரண்டி)

கருவேப்பிலை கொஞ்சம்

சீரகம் (ஒரு தேக்கரண்டி)

மிக்சியில் ஒரு சுற்று அரைத்துக்கொள்ளவும். பரல்பரலாக இருக்கவேண்டும்.



அடுப்பில் வாணலியை வைத்து, கடலெண்ணெய் (1 தேக்கரண்டி) ஊற்றி, காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் பாசிப்பயற்றைக் கொட்டி, தேங்காய் அரைப்பையும் போட்டு கிளறி எடுக்கவும்.



துவரன் ரெடி..

இதை நாம் வத்தல் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

மல்லி துவையல்


கொத்தமல்லி துவையல் 

sam_5269

 

கொத்தமல்லி விதை (2 தே  கரண்டி ), மிளகாய் வற்றல் (3) சேர்த்து வறுத்து கொள்ளவும்.

sam_5264

 

அதனுடன் புளி (கோலிக்குண்டு அளவு), உப்பு சேர்த்து அதிக தண்ணீர் விடாமல் மையாக அரைக்கவும். 

sam_5267

 

மல்லி துவையல் ரெடி 

sam_5272

 

உளுந்தம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். 

sam_5286

 

உளுந்தம் சாதம்


உளுந்தம் சாதம் 

sam_5278

உளுந்தம் பருப்பு 

sam_5248

உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.

உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது. (நன்றி : விக்கி )

உளுந்தின் பயன்கள் :

  • பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்க உதவுகிறது.
  • பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்கவும் பயன்படுகிறது.
  • இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது.
  • கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
  • முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது

உளுந்தம் சாதம் 

 

sam_5278

உடைத்த உளுந்து கொண்டு சோறு ஆக்குவது உடலுக்கு மிக நல்லது. அரிசி, உளுந்து, தேங்காய், மிளகாய் வற்றல், வெள்ளை பூண்டு, சீரகம் ஒன்றாய் சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட. 

பெரும்பாலும் பச்சரிசி தான் உபயோகிப்பது வழக்கம். புழுங்கல்அரிசியும் பயன்படுத்தலாம். 

 

தேவையானவை :

பச்சரிசி – 200 gm அல்லது 1 கப் 

கருப்பு உளுந்து (உடைத்தது) – 100 gm  அல்லது 1/2 கப் 

தேங்காய் – 2 மே. கரண்டி 

வெள்ளை பூண்டு – 4

சீரகம் – 1/2 தே கரண்டி 

வெந்தயம் – 1/4 தி கரண்டி 

உப்பு தேவைக்கு 

 

தாளிக்க :

கடுகு – 1/2 தே கரண்டி 

மிளகாய் வற்றல் – 3

காயம் – 1/2 தே கரண்டி 

கருவேப்பிலை – கொஞ்சம்

 

செய்முறை :

உடைத்த கருப்பு உளுந்தை நன்கு சிவக்க வறுக்கவும். சரியாக வறுபடாவிட்டால் பச்சை வாசம் போகாது. 

sam_5250

அரிசியையும் கை சூடு பொறுக்கும் அளவுக்கு சிறிது வறுத்து கொள்ளவும்.

sam_5251

இரண்டையும் நன்கு கழுவிக்கொள்ளவும். 

sam_5254

பூண்டு மற்றும் வெந்தயம், சீரகம் இவற்றையும் இலேசாக வறுத்து கழுவி வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். 

sam_5259

தேங்காயை நிறம் மாறாமல் வறுத்து அதில் சேர்க்கவும். 

sam_5260

உப்பு சேர்க்கவும். 

ஒரு கப்புக்கு 3 கப் தண்ணீர் சேர்க்கவும். நாம் போட்டிருக்கும்  1  1/2 கப்புக்கு 5 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 

sam_5262

ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக வைத்து எடுக்கவும். 

தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சாதத்துடன் கலக்கவும்.  

sam_5275

 

தொட்டு கொள்ள :

உளுந்தம் சாதத்துடன் தொட்டு கொண்டு சாப்பிட மல்லித்துவையல் நன்றாக இருக்கும். செய்முறை இங்கே.

sam_5286

கோவக்காய் பொரியல்


கோவக்காய் 

(Ivy Gourd)

கோவக்காய் ஆசியா, ஆப்பிரிகா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைகிறது. வெள்ளரியைப்போல் தோற்றம் உடையது. ஆனால் அதைவிட  அளவில் சிறியது.

KovaikaaiCurry (1)

நன்மைகள் :

இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது. உடல் அயர்ச்சியைத் தடுக்கிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது. சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கிறது. 

 

கோவக்காய் பொரியல் 

KovaikaaiCurry (7)

தேவைப்படும் நேரம் : 30 நிமிடம் 

செய்முறை :

  • முதலில் சின்ன வெங்காயத்தை பத்து எடுத்து,  சிறிதாக அரிந்துக்கொள்ளவும்.
  •  தக்காளியையும் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
  • கோவக்காயை நன்றாக கழுவி, வட்டம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் ஒரு மேஜை கரண்டி அளவு துருவிக் கொள்ளவும். 

KovaikaaiCurry (27)

  • தாளிக்கும் கடாயையை அடுப்பில் ஏற்றவும்.
  • எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம் போட்டு வதக்கவும்.  

KovaikaaiCurry (19)

KovaikaaiCurry (18)

 

 

  • கோவக்காயை சேர்த்து வதக்கவும். 

KovaikaaiCurry (17)

 

  • அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

KovaikaaiCurry (15)

 

  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்க்கவும்.
  • மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி 2 தேக்காரண்டி சேர்க்கவும்.
  • மல்லி தூள் 2 தேக்கரண்டி சேர்க்கவும். உப்பும் சேர்க்கவும்.

KovaikaaiCurry (14)

 

KovaikaaiCurry (13)

 

  • நன்றாக வதக்கவும். 

KovaikaaiCurry (10)

 

 

  • சிறிது தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.

KovaikaaiCurry (9)

 

 

  • தேங்காய் துருவல், கருவேப்பிலை கடைசியில் சேர்த்து இறக்கவும்.

SAM_2331

 

  • சுவையான கோவக்காய் பொரியல்  ரெடி. எந்த சாப்பாட்டுடனும் எடுத்துக்கொள்ளலாம்.

SAM_2333

 

KovaikaaiCurry (6)

 

8TE6EMkjc