எலுமிச்சை சாதம்


 

எலுமிச்சை சாதம்

 

தேவையானவை :

பச்சரிசி அல்லது பொன்னி புழுங்கல் அரிசி – 1 உழக்கு

எலுமிச்சை பழம் – 1

மிளகாய் வற்றல் – 3

பச்சை மிளகாய் – 2

கருவேப்பில்லை சிறிதளவு

இஞ்சி (விருப்பபட்டால்) – 1 துண்டு

பெருங்காயம் – 1 தே. கரண்டி

கடுகு – 1 தே. கரண்டி

கடலை பருப்பு – 1 தே. கரண்டி

உப்பு சிறிதளவு

மஞ்சள் போடி – 1/2 தே. கரண்டி

செய்முறை :

  • அரிசியை முக்கால் பதமாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
  • எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுக்கவும்.
  • அதனுடன் உப்பும் சிறிது மஞ்சள் பொடியும் சேர்க்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய்  சேர்த்து தாளித்து எலுமிச்சை சாற்றுடன் ஊற்றவும்.
  • சாதத்துடன் இதை கலந்து வைக்கவும்.

பூண்டு ஊறுகாய்


எந்த வகை சாதம், குழம்பாக இருந்தாலும்  ஊறுகாய் என்று ஓன்று இருந்தாலே போதும். சாதாரணமாக எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்களை வீட்டில் போடுவார்கள். பூண்டு ஊறுகாயை கடைகளில் வாங்குவார்கள். அதில்  பூண்டு வேகாமல் நறுக்கென்று இருக்கும். நாமே பூண்டு ஊறுகாய் செய்யும் முறையை சொல்கிறேன்.

பூண்டு ஊறுகாய்

தேவையானவை :

பூண்டு –                               1/4 கிலோ

நல்லெண்ணெய் –        2 மே. க.

உப்பு –                                    தேவைக்கு

எலுமிச்சம் பழம் –           1

அரைக்க :

கடுகு –                                       1 தே. க.

சீரகம் –                                      1 தே. க.

மல்லி விதை –                      1 தே. க.

மிளகாய் பொடி –                   2 தே. க.

வெந்தயம் –                             1 தே. க.

பெருங்காயம் –                       1 தே. க.

செய்முறை :

  • பூண்டை உரித்து கொள்ளவும்.
  • வாணலியில் அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும்.
  • எண்ணெய் அதிகம் சூடாகாமல் மிதமான சூட்டில் வதக்கவும். (குறைவான சூட்டில் சரியாக வேகாது. அதிக சூட்டில் சீக்கிரம் சிவந்து விடும், ஆனால் வேகாது)
  • சற்று சிவந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும் போட்டு கிண்டி, அடுப்பை உடனே அணைத்து விடவும்.
  • பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை அதில் விடவும்.
  • ஆறியவுடன் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைக்கவும்.

ஊறுகாய் கெடாமல் இருக்க :

  • முடிந்தவரை கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • ஈரமான கரண்டிகளை உள்ளே போடவேண்டாம்.
  • எண்ணெய் ஊற்றி செய்யும் ஊறுகாய்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

    என் சமையல்


    இந்த வலைபதிவில் என் அடுப்படியில் நான் சமைப்பதை பரிமாறுகிறேன். சுவைத்து மகிழுங்கள்.

    நான் என் திருமணத்திற்கு பிறகுதான் சமையலின் பக்கமே ஒதுங்கினேன். என் அத்தையிடம் (my mother-in-law)  இருந்துதான் சமைக்க கற்றுக்கொண்டேன். இன்று நான் நன்றாக சமைப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

    Credit goes to her…