முட்டை கறி


முட்டை கறி

தேவையானவை :

முட்டை – 4

உப்பு – சிறிதளவு

தாளிக்க :

கடுகு – 1/2 தே. கரண்டி

உளுந்தம் பருப்பு – ½ தே. கரண்டி

சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1 மே. கரண்டி 

கருவேப்பிலை – சிறிது

தே. எண்ணெய் –2 தே. கரண்டி 
அரைக்க :

தேங்காய் – 3 மே . கரண்டி 

மிளகாய் வற்றல் – 2

சின்ன வெங்காயம் – 1 மே. கரண்டி

மஞ்சள் பொடி – ½ தே. கரண்டி

சீரகம் – ½ தே. கரண்டி

கருவேப்பிலை – சிறிது

செய்முறை :

  • அரைக்க கொடுத்துள்ளதை கரகரப்பாக அரைக்கவும். 
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை போட்டு தாளித்து அதனுடன் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். கறி ரொம்ப தண்ணீராகவோ, ரொம்ப கெட்டியாகவோ இருக்கக்கூடாது.
  • அதனுள் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றவும்.
  • தீயை குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். முட்டை வேந்துவிட்டால் இறக்கி விடலாம்.
முட்டை கறி



சிறு பருப்பு துவையல்


துவையல்

 

தேவையானவை :
பச்சை பயறு (உடைத்தது) அல்லது பாசிப்பருப்பு –  1 மே. கரண்டி 
மிளகாய் வற்றல் – 1
தேங்காய் – 1/2  மே. கரண்டி 
உப்பு – தேவைக்கு 

 

செய்முறை :
வாணலியில் பாசிப்பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்.
சற்று சிவந்த உடன் இறக்கி, ஆறியவுடன் உப்பு தேங்காய் சேர்த்து அரைக்கவும். 

குறிப்பு :
அரைக்கும் போது முதலில் பாசிப்பருப்பை மட்டும் கரகரப்பாக அரைத்துவிட்டு தேங்காயும் உப்பும் சேர்த்து அரைக்கவும்.
அரைக்கும் போது தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.

அவியல்


தேவையானவை :

முருங்கை காய் – 1 (துண்டுகளை நீளவாக்கில் இரண்டாக்கவும்) 
கத்திரிக்காய் – 4 (மெல்லிய  நீள துண்டுகளாக்கவும்)
வாழைக்காய் – 1 (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
சிறிய  புடலங்காய் – 1 (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
சேனை கிழங்கு – 1௦௦ கிராம் (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
கொத்தவரங்காய் – 1௦௦ கிராம் (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
காரட் – 1 (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
மாங்காய் – 1 (3 இன்ச் துண்டுகளாக்கவும்)
தே. எண்ணெய் – 2 மே. கரண்டி 
தயிர் – 1 மே. கரண்டி 
உப்பு தேவைக்கு 

அரைக்க :
தேங்காய் – 3 மே. கரண்டி 
பச்சை மிளகாய் – 2
புளி – 1/2 தே. கரண்டி 
சீரகம் – 1/2 தே. கரண்டி 
சின்ன வெங்காயம் – 10
கருவேப்பிலை – சிறிது 

செய்முறை :
அரைக்க கொடுத்துள்ளதை இரண்டு சுற்று மட்டும் மிக்சியில் சுற்றி எடுக்கவும்.
காய்கறிகளை சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்கவும். 
  • முதலில் சேனை கிழங்கை மட்டும் தனியாக வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்( சில கிழங்கு ஊறும்). 
  • அதனுடன் முருங்கை, கொத்தவரங்காய் மட்டும் வேக வைக்கவும் (வேக சிறிது நேரம் ஆகும்). 
  • பிறகு மற்ற காய்களை (மாங்காய் தவிர ) சேர்த்து வேக வைக்கவும். 
  • மாங்காயை சேர்த்து அது சற்று வெந்தவுடன் அரைத்ததை சேர்க்கவும்.
அதிகம் குழைந்துவிடாமல் கிண்டி தயிர் சேர்த்து கடைசியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.

கீரை – பருப்பு சாதம்


தேவையானவை :

  • புழுங்கல் அரிசி – 250  கிராம்
  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • கீரை – 1 கிண்ணம் (ஏதாவது ஒரு கீரை – முருங்கை , சுகிட்டி, அரை கீரை ) 
  • உப்பு –   தேவையான அளவு
  • சாம்பார் பொடி –  3 தே. கரண்டி
  • புளி கரைசல்  –   1 கிண்ணம் 
  • தேங்காய் எண்ணெய் – 1 மே. கரண்டி
  • கடுகு – 1 தே. கரண்டி
  • பெருங்காயம் – 1 தே. கரண்டி 
  • கடலை பருப்பு – 1 தே. கரண்டி
  • கருவேப்பிலை – சிறிது


அரைக்க :

  • தேங்காய் – 2  மே. கரண்டி
  • சீரகம் – 1 தே. கரண்டி
எல்லாம் கலந்தது
எல்லாம் கலந்தது

செய்முறை :

  • அணைத்தையும் கலந்து மைக்ரோவேவ்  அவனில்(microwave oven) வைக்கும் கண்ணாடி பாத்திரத்தில்( Glass Bowl) வைக்கவும். 
  • தண்ணீர் ( 1 பங்கு அரிசிக்கு 3 பங்கு தண்ணீர், புளி கரைசலையும் சேர்த்து ) அளவாக சேர்க்கவும். 
  • இன்னொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, அவனில் ஒரு நிமிடம் வைத்து சூடாக்கி, அதில் கடுகு , கடலை பருப்பு, பெருங்காயம் , மிளகாய் வற்றல் , கருவேப்பிலை சிறிது போட்டு மூடி இரண்டு நிமிடம் அவனில் வைத்து தாளித்து எல்லாம் கலந்து வைத்திருக்கும் பாத்திரத்தில் சேர்க்கவும்.
  • Oven – Temperature – 600 degree  ;  Time – 30 minutes வைத்து வேக வைக்கவும்
  • இடையில் ஒரு தடவை எடுத்து கலக்கி விடவும்.
  • Time முடிந்தவுடன் oven யை off பண்ணிவிட்டு, ஒரு 5 நிமிடம் சாதத்தை உள்ளே வைத்துவிட்டு பிறகு எடுக்கவும். 
  • கீரை – பருப்பு சாதம் ரெடி.
கீரை - பருப்பு சாதம்