உருளை கிழங்கு கறி

தேவையானவை 

உருளை கிழங்கு –     1/2 கிலோ 
பூண்டு –       3 பல்(சிறு துண்டுகளாக்கியது ) 
இஞ்சி(விருப்பப்பட்டால்) –   சிறிய துண்டு(சிறு துண்டுகளாக்கியது)
மிளகாய் பொடி –    2 தே. கரண்டி  
மல்லி பொடி –    2 தே. கரண்டி 
மஞ்சள் பொடி –    1/2 தே. கரண்டி 
உப்பு –    தேவைக்கு 
கடுகு –     1/2 தே. கரண்டி 
உளுந்து –     1/2 தே. கரண்டி 
கருவேப்பிலை –   சிறிதளவு 
உருளை கிழங்கு கறி

 

செய்முறை :

  • உருளை கிழங்கை முக்கால் பதத்திற்கு  வேக வைக்கவும்.
  • தோல் உரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 
  • அதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • வானலியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து வதக்கி, மொர மொரப்பானவுடன் எடுக்கவும். 
குறிப்பு :
இதில் உருளை கிழங்கு தோலை முதலில் உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, முக்கால் பதத்திற்கு வேகவைத்தும் செய்யலாம். அது இன்னும் மொர மொரப்பாக இருக்கும்.


One Reply to “”

  1. பிங்குபாக்: புளி கறி « இலவசம்

பின்னூட்டமொன்றை இடுக