சாம்பார்


தேவையானவை :

துவரம் பருப்பு –  200 கிராம்

புளி – எலுமிச்சை அளவு

முருங்கை காய் – 1

கத்திரிக்காய் – 3

உருளை கிழங்கு – 2

பூசணி காய் – சிறிய துண்டு

வெண்டைக்காய் (தேவையானால்)  – 4

சாம்பார் பொடி –  5 தே. கரண்டி

கடுகு – 1 தே. கரண்டி

வெந்தயம் – 1/2  தே. கரண்டி

பெருங்காயம் சிறிதளவு

கருவேப்பிலை சிறிதளவு

உப்பு தேவைக்கு

தே. எண்ணெய் – 1 தே. கரண்டி

 

சாம்பார்

 செய்முறை : 

  • துவரம் பருப்பை வேக வைக்கவும்.
  • காய்கறிகளை தனியாக வேக வைக்கவும்.
  • புளியை கரைத்துக் கொள்ளவும்.
  • வெந்த பருப்பு, காய், புளிகரைசல், சாம்பார் பொடி, உப்பு  இவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • வானலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
  • சுவையான சாம்பார் ரெடி.
குறிப்பு  :
                      காய்களை வேகவைக்கும் போது, பூசணிக் காயை கடைசியில் சேர்க்கவும். இல்லையென்றால் குழைந்து விடும். அதே போல் வெண்டைக்காயை லேசாக வதக்கி கடைசியில் சேர்க்கவும்.

என் சமையல்


இந்த வலைபதிவில் என் அடுப்படியில் நான் சமைப்பதை பரிமாறுகிறேன். சுவைத்து மகிழுங்கள்.

நான் என் திருமணத்திற்கு பிறகுதான் சமையலின் பக்கமே ஒதுங்கினேன். என் அத்தையிடம் (my mother-in-law)  இருந்துதான் சமைக்க கற்றுக்கொண்டேன். இன்று நான் நன்றாக சமைப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

Credit goes to her…