பாசிப்பயறு துவரன்

பாசிப்பயறு ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது இது.
ஒரு கப் அளவு பாசிப்பயற்றை இரவில் ஊற வைத்துவிடவும். காலையில் நீரை வடித்துவிட்டு, உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைக்கும்போது, மேலே எழும்பிவரும் நுரையை நீக்கிவிடவும்.


அரைக்க :
தேங்காய் (1மேசைக்கரண்டி)
மிளகாய் வற்றல் (1)
வெள்ளைப்பூண்டு (4 பல் )
மஞ்சள் தூள் (அரை தேக்கரண்டி)
கருவேப்பிலை கொஞ்சம்
சீரகம் (ஒரு தேக்கரண்டி)
மிக்சியில் ஒரு சுற்று அரைத்துக்கொள்ளவும். பரல்பரலாக இருக்கவேண்டும்.


அடுப்பில் வாணலியை வைத்து, கடலெண்ணெய் (1 தேக்கரண்டி) ஊற்றி, காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் பாசிப்பயற்றைக் கொட்டி, தேங்காய் அரைப்பையும் போட்டு கிளறி எடுக்கவும்.


துவரன் ரெடி..

இதை நாம் வத்தல் குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.