எண்ணெய் கத்திரிகாய் குழம்பு
வறுக்க :
மல்லி விதை – 1 மேசைக்கரண்டி
மிளகாய் – 5
நல்ல மிளகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (பெரியது) அல்லது 5 சின்ன வெங்காயம்
கருவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
தேங்காய் – 6 சில்லு அல்லது 2 மேசைக்கரண்டி
குழம்புக்கு :
எலுமிச்சை அளவு புளி தண்ணீரில் ஊறப்போட்டு, புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
கத்திரிகாய்களை (3) கழுவி நான்காக குறுக்கே முக்கால்வாசி அளவுக்கு வெட்டவும்.
கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் (2 மேசை கரண்டி) ஊற்றி காயவைக்கவும். எண்ணெய் சூடானதும், கத்திரிக்காய்களை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வெந்தயம் (1 தேக்கரண்டி), கடுகு (1 தேக்கரண்டி), கருவேப்பிலை கொஞ்சம் போட்டு பொரிக்கவும்.
அதனுடன் புளிக்கரைசலை ஊற்றிக் கொஞ்சம் கொதிக்க வைக்கவும். அரைத்த மசாலாவைப் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
இதனுடன் சாப்பிட வாழைக்காய் துவரன் அல்லது பருப்பு, பாசிப்பயறு துவரன் போன்றவை சரியாக இருக்கும்.