மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் 

12509118_10209030767112819_4492431078640752586_n

மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டும்ன்னு சொல்லுவாங்க. சாதம், குழம்பு எதுவாக இருந்தாலும்  மாங்காய் ஊறுகாய் ஓன்று போதும்.

தேவையானவை :

மாங்காய் – 1

பச்சை மிளகாய் – 2

மிளகாய் பொடி – 2 தே கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தே கரண்டி

உப்பு தேவைக்கு

பெருங்காயப் பொடி – 1/4 தே கரண்டி

தாளிக்க தேங்காயெண்ணெய் – 2 தே கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

கடுகு – 1/4 தே கரண்டி

வெந்தயம் – 1/4 தே கரண்டி

 

செய்முறை :

  • மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • பச்சை மிளகாயையும் சிறிதாய் அரிந்துக் கொள்ளவும்.  
  • உப்பு, காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கரண்டியால் விரவி வைக்கவும். மிளகாய் தூள் மட்டும் மாகாயின் புளிப்புக்கு ஏற்ப சேர்க்கவும். மாங்காய் அதிகம் புளித்திருந்தால், மிளகாய் தூள் சற்று அதிகம் போடவும். புளிப்பு குறைவாக இருந்தால், அதையும் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு பத்து நிமிடமாவது இந்த கலவை ஊறவேண்டும். அப்போதுதான் அந்த உப்பு கரையும்.  
  • வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அதில் இந்த மாங்காய் கலவையை கொட்டி இளம் சூட்டில் கலந்து இறக்கவும். 
  • இனி ஆறியவுடன் எடுத்து பிரிஜில் வைத்துக்கொள்ளலாம். ஒரு நான்கு நாட்கள் அப்படியே இருக்கும். 
  • தயிர் சாதத்திற்கு உகந்தது. 

 

 

giphy1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: