வரகு புலவு
சிறு தானியங்களான கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு முதலியன உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து, புரதச் சத்து, தாது உப்புகள், இரும்பு கால்சியம் முதலியவை இவற்றில் நிறைந்து காணப்படும். இங்கு வரகை வைத்து சமையல் செய்வது குறித்துப் பார்ப்போம்.
வரகு புலவு :
தேவையானவை :
வரகு அரிசி – 200 கிராம்
நறுக்கிய காய்கறிகள் (காரட், பீன்ஸ், பட்டாணி, குடை மிளகாய்) – 100 கிராம்
உப்பு தேவைக்கு
கரம் மசாலா பொடி – 1/4 தே.கரண்டி
மிளகாய் பொடி – 1 தே. கரண்டி
தண்ணீர் – 400 மிலி
தாளிக்க :
பட்டை, அன்னாசி பூ, பிரியாணி இலை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய்
செய்முறை :
வரகு அரிசியை கழுவி நனைத்து வைக்கவும்.
பெரிய வாணலியை அடுப்பில் வைத்து, தாளிக்க உள்ளவற்றை ஒவ்வொன்றாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காய்களைச் சேர்த்து பிரட்டவும்.
அரிசியை சேர்த்து, பிரட்டவும்.
தண்ணீர் சேர்க்கவும். ( ஒரு கப்புக்கு இரண்டு கப்பு என்ற விகிதத்தில் ).
மூடி வேக வைக்கவும்.
குக்கரில் வேக வைக்க வேண்டுமானால், சற்று தண்ணீரைக் குறைத்துக் கொள்ளலாம். இரண்டு விசிலுடன் இறக்கிவிடவும்.
கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
வரகு புலவு ரெடி.