மரவள்ளிகிழங்கு
மரவள்ளிகிழங்கு என்பது நமது தென் இந்தியாவின், முக்கியமாக கேரளாவின் பிரதான உணவு. அவர்கள் அதை மீன் கறியுடன் கூட்டாய் வைத்து உண்ணுவார்கள்.
கிழங்கில் மாவுசத்து மட்டுமே உள்ளது. அதனால் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுப்பதில்லை.
கிழங்கு கறி
தேவையானவை :
மரவள்ளிக்கிழங்கு – 1/2 கிலோ
உப்பு தேவைக்கு
தே. எண்ணெய் – 2 மே. கரண்டி
அரைக்க :
தேங்காய் – 3 மே. கரண்டி
மிளகாய் வற்றல் – 1
மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
வெள்ளை பூண்டு – 2
கருவேப்பிலை சிறிது
தாளிக்க :
தாளித்தல் கிடையாது. முடிக்கும் போது தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை பிய்த்து போட்டு இறக்கவும்.
செய்முறை :
- அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைத்துக் கொள்ளவும். ரொம்ப கரகரப்பாகவும் இல்லாமல், மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.
- கிழங்கை பொடியாக வெட்டி, நன்கு வேக வைக்கவும்.
- முக்கால் பாகம் வெந்ததும், உப்பு சேர்க்கவும்.
- அரைத்ததை சேர்த்து, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்.
- தேங்காய் எண்ணெய்யும் கருவேப்பிலையும் சேர்த்து இறக்கிவிடவும்.
- சுவையான கிழங்கு கறி தயார்.
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
மிக்க நன்றி