இஞ்சி சாதம்
வீட்டில் இஞ்சி நிறைய இருந்தால், இஞ்சி சாதம் செய்யலாம். நானும் அப்படிதான் ஆரம்பித்தேன்.
இஞ்சியை தோலுரித்து, சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் சதைத்துக் கொள்ளவும்.
கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, இலவங்கப் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய்
இரண்டு பச்சை மிளகாயை நீளமாய் கீறிக் கொள்ளவும்..
மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா
பாசுமதி அரிசி அல்லது கிச்சடி சம்பா அரிசியை நனைத்து வைத்துக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவனில் (Oven) ஒரு கண்ணாடி பவுலில் எண்ணெய் ஊற்றி, ஒரு நிமிடம் சூடு பண்ணி, அதனுடன் பட்டை, லவங்கம், அன்னாசி பூ, இலை, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி எல்லாம் சேர்த்து 2 mins வைத்து எடுக்கவும்.
பிறகு அதனுடன் அரிசி, மிளகாய் பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஒரு அளவு அரிசிக்கு இரண்டு அளவு தண்ணீர் சேர்த்து oven யில் 20 mins வைக்கவும்.
இடையில் ஓரிரு முறை கிளறிக் கொடுக்கவும்.
இஞ்சி சாதம் ரெடி
சரிங்க… செஞ்சி பார்க்கிறோம்…