சுண்டைக்காய் குழம்பு….
தேவையானவை
- சுண்டைக்காய் வத்தல் – 1 மே கரண்டி
- மிளகாய் பொடி – 1 தே கரண்டி
- மல்லி பொடி – 2 தே கரண்டி
- மஞ்சள் பொடி – 1/2 தே கரண்டி
- உப்பு
- புளி கரைசல் – 2 மே கரண்டி
தாளிக்க
- நல்லெண்ணெய் – 2 தே கரண்டி
- கடுகு – 1/4 தே கரண்டி
- வெந்தயம் – 1/4 தே கரண்டி
- கருவேப்பிலை – சிறிது
- சின்ன வெங்காயம் – 1 மே கரண்டி
செய்முறை
- சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் பொரித்து எடுத்துகொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
- மிளகாய் தூள், மல்லி பொடி, மஞ்சள் பொடி, புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- நன்கு கெட்டியானவுடன் வறுத்து வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலை சேர்க்கவும்.
- இப்போது வத்தல் குழம்பு ரெடி……
சின்னச்சின்ன சிதறல்களைத் தூவும் அகிலாவும், சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்யும் அகிலாவும் ஒருவர்தானா?
பாராட்டுக்கள் சகலகலாவல்லிக்கு!
ஒண்ணு தான் மேம்…நானே தான்….
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்…
நன்றி…
நன்றி தனபாலன்….