பேபி கார்ன் :
பேபி கார்ன் (8) எடுத்து சுத்தப்படுத்தி இரண்டு இன்ச் அளவிலான துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அதன் மேல் மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
அதன் பிறகு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
விருப்பப்பட்டால் சாட் மசாலாவை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கலாம்.
பேபி கார்ன் மசாலா :
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக கீறிய பச்சை மிளகாய் எல்லாம் வாணலியில் வதக்கி,
அதனுடன் கரம் மசாலா தூள், soya sauce, மிளகாய் தூள் சேர்த்து பொரித்து வைத்துள்ள பேபி கார்னை போட்டு கிண்டி இறக்க வேண்டியதுதான்.
கொத்தமல்லி தூவவும்.
வீட்டில் செய்து பார்க்க சொல்கிறேன்!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
கண்டிப்பாக செய்ய சொல்லுங்கள்…மசாலா பண்ணும்போது மட்டும் சற்று உப்பு குறைத்து போட சொல்லுங்கள்….