புதினா – 1 கட்டு
தேங்காய் – 1 மே. கரண்டி
மிளகாய் வற்றல் – 3
வெள்ளை பூண்டு – 1
புளி – 1/2 தே. கரண்டி
உப்பு சிறிதளவு
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
கருவேப்பிலை சிறிது
வாணலியில் முதலில் கடலை பருப்பு, மிளகாய் வற்றல், புதினா, கருவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் புளி, பூண்டு, உப்பு, தேங்காய் சேர்த்து மையாக அரைக்கவும்.
கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து விடவும்.
புதினாவிற்கு பதிலாக கொத்தமல்லி வைத்து அரைத்தால் மல்லி சட்னி ரெடி.