
தேவையானவை :
புளி கரைசல் – 200 மி. லி
மல்லி பொடி – 2 தே. கரண்டி
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க :
நல்லெண்ணெய் – 1 மே. கரண்டி
கடுகு – 1/2 தே. கரண்டி
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
பெருங்காயம் – 1/2 தே கரண்டி
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1/2 தே கரண்டி
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்து உள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
மல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.
புளி கரைசலை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
அடுப்பில் இருந்து இறக்கி பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
குறிப்பு :
இதற்கு தொட்டு கொள்ள சிறு பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.