தேவையானவை :
முருங்கை காய் – 1 (துண்டுகளை நீளவாக்கில் இரண்டாக்கவும்)
கத்திரிக்காய் – 4 (மெல்லிய நீள துண்டுகளாக்கவும்)
வாழைக்காய் – 1 (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
சிறிய புடலங்காய் – 1 (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
சேனை கிழங்கு – 1௦௦ கிராம் (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
கொத்தவரங்காய் – 1௦௦ கிராம் (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
காரட் – 1 (2 இன்ச் துண்டுகளாக்கவும்)
மாங்காய் – 1 (3 இன்ச் துண்டுகளாக்கவும்)
தே. எண்ணெய் – 2 மே. கரண்டி
தயிர் – 1 மே. கரண்டி
உப்பு தேவைக்கு
அரைக்க :
தேங்காய் – 3 மே. கரண்டி
பச்சை மிளகாய் – 2
புளி – 1/2 தே. கரண்டி
சீரகம் – 1/2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் – 10
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
அரைக்க கொடுத்துள்ளதை இரண்டு சுற்று மட்டும் மிக்சியில் சுற்றி எடுக்கவும்.
காய்கறிகளை சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்கவும்.
- முதலில் சேனை கிழங்கை மட்டும் தனியாக வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்( சில கிழங்கு ஊறும்).
- அதனுடன் முருங்கை, கொத்தவரங்காய் மட்டும் வேக வைக்கவும் (வேக சிறிது நேரம் ஆகும்).
- பிறகு மற்ற காய்களை (மாங்காய் தவிர ) சேர்த்து வேக வைக்கவும்.
- மாங்காயை சேர்த்து அது சற்று வெந்தவுடன் அரைத்ததை சேர்க்கவும்.
அதிகம் குழைந்துவிடாமல் கிண்டி தயிர் சேர்த்து கடைசியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.