தேவையானவை :
துவரம் பருப்பு – 200 கிராம்
புளி – எலுமிச்சை அளவு
வெண்டைக்காய் – 4
சாம்பார் பொடி – 5 தே. கரண்டி
தாளிக்க :
கடுகு – 1 தே. கரண்டி
வெந்தயம் – 1/2 தே. கரண்டி
பெருங்காயம் சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவைக்கு
தே. எண்ணெய் – 1 தே. கரண்டி

செய்முறை :
- துவரம் பருப்பை வேக வைக்கவும்.
- வெண்டைக்காயை லேசாக வதக்கி சிறிது புளி கரைசலில் வேக வைக்கவும்.
- வெந்த பருப்பு, வெண்டைக்காய், புளிகரைசல், சாம்பார் பொடி, உப்பு இவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், கிள்ளிய மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
- சுவையான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.