
தேவையானவை :
அவல் – 1 கிண்ணம்
தேங்காய் துருவியது – 1/2 கிண்ணம்
உப்பு – சிறிதளவு
தாளிக்க :
கடுகு – 1/2 தே. கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் நறுக்கியது – 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் – 4
கருவேப்பிலை – சிறிது
இஞ்சி நறுக்கியது – சிறிய துண்டு
தே. எண்ணெய் – 1 தே. கரண்டி
செய்முறை :
- அவலை தண்ணீர் சிறிது ஊற்றி உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
- வாணலியில் தே. எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளதை போட்டு வதக்கவும்.
- அதனுடன் ஊறவைத்த அவல் சேர்த்து வதக்கவும். கடைசியில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
- அவல் உப்புமா ரெடி….
குறிப்பு :
நான் முதல் தடவை செய்யும் போது நிறைய தண்ணீர் ஊற்றி அவல் உப்புமாவாக வராமல் அவல் சாதமாகி போனது தான் பெரிய காமெடி….
அவலை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்? கிண்ணம் என்றால் எந்த அளவு? ஒரு கிண்ணம் = ஒரு ஆழாக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா?
கிண்ணம் என்பது ஓர் அளவுதான். அது ஒரு ஆழாக்கு அல்லது இருநூறு கிராம் ஏதாவது ஓன்று. அதே அளவு கோளில் தேங்காய் போன்றவற்றை அளந்து கொள்ளவும்…அவளை சுமார் பத்து நிமிடம் ஊற வைத்தல் போதும்…ஒரு தடவை செய்துவிட்டால் பழக்கமாகிவிடும்.