
தேவையானவை :
காய் (முருங்கை, கத்திரி, வாழைக்காய், பூசணிக்காய் ) – 10 துண்டுகள்
புளி கரைசல் – 1 கிண்ணம்
ந. எண்ணெய் – 1 மே. கரண்டி
உப்பு – சிறிதளவு
அரைக்க :
மல்லி விதை – 1 மே. கரண்டி
மிளகாய் வற்றல் – 3
நல்ல மிளகு – 1 /2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் – 5
தேங்காய் – 3 மே. கரண்டி
கருவேப்பிலை – சிறிது
தாளிக்க :
கடுகு – 1 /2 தே. கரண்டி
வெந்தயம் – 1 /2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது ) – 1 /2 கிண்ணம்
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
- முதலில் அரைக்க கொடுத்துள்ளதை வறுத்து அரைக்கவும்.

- காய்களை வேக வைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை தாளிக்கவும்.
- அதனுடன், புளி கரைசல், வேக வைத்துள்ள காய், அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தீயல் ரெடி….
குறிப்பு :
- மல்லி விதை அரைபடுவதற்கு சற்று நேரமாகும். அதனால் அதற்கு பதிலாக மல்லி தூள் பயன்படுத்தலாம். வறுக்கும் போது கடைசியில் பொடியை சேர்த்து லேசாக வறுக்கவும்.
- காய்களை சேர்த்தும் போட்டு குழம்பு வைக்கலாம் அல்லது தனி தனியாக போட்டும் வைக்கலாம்.