பூண்டு ரசம்

செய்முறை :

புளியை ஊற வைக்கவும்.
நல்ல மிளகு(1 தே. கரண்டி), சீரகம்(1 தே. கரண்டி), மல்லி விதை(1 தே. கரண்டி), பூண்டு(5 பல்) சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
ம. பொடி, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.

அரைத்ததை எடுத்து வைக்கவும்.
வாணலியில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், தேவைபட்டால் மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
அதில் புளி கரைசல், உப்பு, அரைத்து வைத்துள்ள பொடி, கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைக்கவும். லேசாக கொதிக்கும் போதே இறக்கி விடவும்.
பூண்டு ரசம் ரெடி….
//ம. பொடி//
இப்படி ஒரு பொடி நான் கேள்விப்பட்டதேயில்லையே:)
மஞ்சள் பொடியைத்தான் ம. பொடி என்று சுருக்கிவிட்டேன்.
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
மிக்க நன்றி ஏன் வலைப்பதிவை அனைவர் பார்வையிலும் வைத்ததற்கு….