
தேவையானவை :
பச்சரிசி மாவு – 4 கிண்ணம்
உளுந்த மாவு – 1 கிண்ணம்
வெண்ணெய் – 2 தே. கரண்டி
சீரகம் – 2 தே. கரண்டி
எள் (விருப்பபட்டால்) – 1 தே. கரண்டி
ஓமம் (விருப்பபட்டால்) – 1/2 தே. கரண்டி
உப்பு சிறிதளவு
மிளகாய் பொடி – 1 தே. கரண்டி
பெருங்காய தூள் சிறிதளவு
செய்முறை :
- பச்சரிசியை தண்ணீரில் நனைத்து, உலர வைத்து, மையாக திரித்துக் கொள்ளவும்.
- உளுந்தை சற்று சிவக்க வறுத்து, திரிக்கவும்.
- 4 பங்கு பச்சரிசி மாவுக்கு, 1 பங்கு உளுந்த மாவு எடுத்து உப்பு, மிளகாய் பொடி, பெருங்காய தூள், சீரகம், எள் கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
- முறுக்கு அச்சில் தேங்காய் எண்ணெய் தடவி, ஈரமான துணி ஒன்றில் முறுக்கு மாவை பிழியவும்.
- எண்ணெய் நன்றாக சூடானதும் முறுக்கு போட்டு எடுக்கவும்.
குறிப்பு :
மாவு பிசையும் போது அச்சில் வைத்து அதிக அழுத்தம் கொடுக்காமல் பிழிந்தால் மாவு வருகிற மாதிரி, தண்ணீர் அளவாக சேர்க்க வேண்டும். தண்ணீர் அதிகப்பட்டால், முறுக்கு எண்ணையை அதிகம் குடிக்கும்.