
தேவையானவை :
உளுந்தம் பருப்பு – 200 கிராம் (1 உழக்கு)
பச்சரிசி – 1 தே. கரண்டி
மிளகாய் வற்றல் – 10
கருவேப்பில்லை சிறிதளவு
மல்லி விதை – 1 தே. கரண்டி
கருப்பு எள் – 1 தே. கரண்டி
உப்பு – 1 தே. கரண்டி
நல்லெண்ணெய் – 1/2 தே. கரண்டி
வெள்ளை பூண்டு – 5 பல்
பெருங்காய தூள் – சிறிதளவு
செய்முறை :
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் மட்டும் நல்ல சிவக்கும் வரை வறுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே வாணலியில் உளுந்தை சற்று சிவக்க வறுக்கவும்.
- அதனுடன் அரிசி, மல்லி, எள் சேர்த்து வறுக்கவும். எள் பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள மிளகாயுடன் பெருங்காய தூளும் சேர்த்து ஆற வைக்கவும்.
- சூடான (தீயை அணைத்து விடவும்) வாணலியில் உரித்த பூண்டை போட்டு லேசாக பிரட்டி எடுக்கவும். பூண்டி பச்சை வாசனை சற்று குறையும்.
- பூண்டை தவிர அனைத்தையும் பொடியாக்கவும். கடைசியில் பூண்டை போட்டு பொடித்து எடுக்கவும்.
குறிப்பு :
எள் ஒத்து கொள்ளாதவர்கள் அதை போட வேண்டாம். நல்லெண்ணைக்கு பதிலாக சூரியகாந்தி எண்ணையை பயன்படுத்தலாம்.