கூட்டாஞ்சோறு

20130217_133634

 

தேவையானவை :

புழுங்கல் அரிசி –      250  கிராம்

துவரம் பருப்பு –          100 கிராம்

காய்கள் –                      1 கிண்ணம்

முருங்கை கீரை –     1 கிண்ணம்

உப்பு –                              தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 1 மே. கரண்டி

கடுகு –                                  1 தே. கரண்டி

பெருங்காயம் –                1 தே. கரண்டி

கடலை பருப்பு –               1 தே. கரண்டி

கருவேப்பிலை –              சிறிது

அரைக்க :

தேங்காய் –                 2  மே. கரண்டி

மிளகாய் வற்றல் –   3

மஞ்சள் பொடி –          1 தே. கரண்டி

நல்ல மிளகு –               1 தே. கரண்டி

சீரகம் –                             1 தே. கரண்டி

புளி –                                  1 எலுமிச்சை அளவு

கருவேப்பிலை –            சிறிது

செய்முறை :

முதலில் துவரம் பருப்பை வேக விடவும்.

பாதி வெந்தவுடன் புழுங்கல் அரிசி பொடியாக வெட்டிய காய்கள் ( முருங்ககாய் – 1 ,  கத்திரிக்காய் – 3 , வாழைக்காய் – 1 , புடலங்காய் – சிறியது 1 , பட்டை அவரைக்காய் – 100 கிராம்) ,

அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சிறிதளவு ,முருங்கக்கீரை ,தண்ணீர் ( 800 மி.லி. ) எல்லாம் சேர்த்து வேகவிடவும்.

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை குறைத்து சுமார்  15 நிமிடம் வேகவிடவும். சாதம் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு , அதில்கடுகு , கடலை பருப்பு, பெருங்காயம் , மிளகாய் வற்றல் , கருவேப்பிலை சிறிது போட்டு தாளித்து சாதத்தில் விடவும்.

கூட்டாஞ்சோறு மணம் உங்களை சாப்பிட அழைக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: