தக்காளி சாதமும் தயிர் வெண்டைக்காயும்


தக்காளி சாதம் :

தக்காளி சாதம்

முதலில் சீரக சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசி ( 200 கிராம்) எடுத்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.

தக்காளி (2), பெரிய வெங்காயம் ( 1), இஞ்சி (1 சிறிய துண்டு ), பச்சை மிளகாய் (4 இரண்டாக கீறவும்)  சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் / ரீபைன்ட் எண்ணெய் ( 2 தே. கரண்டி ) ஊற்றி பட்டை (2 ),  லவங்கம் (2 ),  பிரிஞ்சி இலை (1), ஏலக்காய் (2),   கிராம்பு (2),   கடலை பருப்பு (1/2 தே கரண்டி ),   பெருங்காயம் (1/2  தே கரண்டி ),    கிள்ளிய  மிளகாய் வற்றல் (2),  கருவேப்பிலை (1 கொத்து ), கடுகு (1/2  தே கரண்டி ) சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை பிரட்டவும்.

மஞ்சள் பொடியும், உப்பும் சேர்த்து கொத்தமல்லி தழை கிள்ளி போட்டு இறக்கவும்.

தக்காளி மசாலா

இதை சாதத்துடன் போட்டு கிளறி வைக்கவும்.

தக்காளி சாதம் ready….

தயிர் வெண்டைக்காய் :

தயிர் வெண்டைக்காய்

வெண்டைக்காயை 1/2 இன்ச் அளவிலான துண்டுகளாக நறுக்கி சற்று வாட வைக்கவும்.

தயிரில் பச்சை மிளகாய் (2) கீறி போடவும். கொத்தமல்லி தழை , உப்பு சிறிது சேர்க்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, கடுகு தாளித்து, பெருங்காயம் , கருவேப்பிலை போட்டு தயிருடன் கலக்கவும்.

வெண்டைக்காயை எண்ணையில் வறுத்து எடுக்கவும். எண்ணெய் ஊறிஞ்சும் காகிதத்தில் வைத்து எண்ணையில்லாமல் தயிரில் கலக்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வெண்டைக்காயை தயிருடன் சேர்க்கவும். அப்போதுதான் பொரு பொருப்புடன் இருக்கும்.

தயிர் வெண்டைக்காய் ready….