மரவள்ளி கிழங்கும் மிளகாய் பொடியும்


நான் மரவள்ளி கிழங்கு வாங்கும் போது என் அருகில் காய் வாங்கி கொண்டிருந்த சென்னையில் எங்கள் பிளாட்டில் குடியிருக்கும் பெண்மணி ஒருவர் என்ன இதையெல்லாம் சாப்பிடுவீர்களா என்றார்கள். மரவள்ளி கிழங்கு என்றாலே ஏதோ ஏழை மக்கள் தான் அதை சாப்பிடுவார்கள் என்ற நினைப்பு இந்த மாநகரில் உள்ள நிறைய மக்களிடம் இருக்கிறது. மரவள்ளி கிழங்கில் வகை வகையாக சமையல் செய்யலாம். கேரளாவின் பிரதான உணவே மரவள்ளி கிழங்கும் மீனும்தான்.


மரவள்ளி கிழங்கு :

மரவள்ளி கிழங்கு



மரவள்ளி கிழங்கை  (1 கிலோ )  தோல் சீவி , நன்றாக கழுவி, இன்ச் அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

மரவள்ளி கிழங்கு
மரவள்ளி கிழங்கு துண்டுகள்


தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து விடவும்.

மரவள்ளி கிழங்கு



இனி நம் விருப்பம் போல் கடுகு, உளுந்து, கிள்ளிய மிளகாய் வற்றல், சிறிது மஞ்சள் பொடி, கருவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து தாளித்து சாப்பிடலாம்.


இல்லை என்றால், அவித்த கிழங்குடன் சுட்ட மிளகாய் பொடி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.


சுட்ட மிளகாய் பொடி :

சுட்ட மிளகாய் பொடி


மிளகாய் வற்றலை (10)  அப்பள குத்தி (அப்பளம் சுடுவதற்காக குடை கம்பியில் செய்திருப்பார்கள் ) அல்லது புது தென்ன ஈக்கிளில் சொருகி அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கவும்.

மிளகாய் வற்றல்
வெள்ளை பூண்டு

வெள்ளை பூண்டு (10), உப்பு சிறிது சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். சாப்பிடும் போது இந்த பொடியுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிழங்குக்கு தொட்டுக்கொள்ளவும்.